ECONOMY

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 3,926 ஆக குறைந்தது- நால்வர் மரணம்

29 ஜூலை 2022, 6:20 AM
நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 3,926 ஆக குறைந்தது- நால்வர் மரணம்

ஷா ஆலம், ஜூலை 29- நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று நான்காயிரத்திற்கும் கீழ் குறைந்து 3,926 ஆகப் பதிவானது. இந்நோய் தொற்று காரணமாக நேற்று நால்வர் உயிரிழந்தனர்.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 68 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அதே புதிய புதிதாக நேர்ந்த நான்கு மரணங்களுடன் சேர்த்து இந்நோய் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,946 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மொத்தம் 3,542 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். நாட்டில் இன்னும் தீவிரமாக உள்ள நோய்த் தொற்று எண்ணிக்கை 47,286 ஆகும்.

தீவிர பாதிப்பைக் கொண்ட நோயாளிகளில் 45,657 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,539 பேர் மருத்துவமனைகளிலும் 30 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.