கோலாலம்பூர், ஜூலை 19: ஜுவை ஐக்யுஐ மலேசியா வெளியிட்ட மூன்றாம் காலாண்டு 2022 சொத்துக் குறியீடு மற்றும் கணக்கெடுப்பின்படி, குடியிருப்புச் சொத்து சந்தை அடுத்த 12 மாதங்களில் விலைகள் மற்றும் வாடகைகள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் முகவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடுத்த 24 மாதங்களில் வீட்டு விலைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கும் என ஜுவை ஐக்யுஐ குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) காஷீஃப் அன்சாரி தெரிவித்தார்.
“அடுத்த 12 மாதங்களில் நாடு முழுவதும் வீடுகளின் விலை 11.8 விழுக்காடு அதிகரிக்கும் என்று முகவர்கள் நம்புகின்றனர். அடுத்த ஆண்டு வளர்ச்சி தொடரும், அடுத்த 24 மாதங்களில் விலை 16.5 விழுக்காடு உயரும்,” என்றார்.
கணக்கெடுப்பின்படி, பினாங்கில் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் 17 விழுக்காடு, ஜோகூரில் 18.1 விழுக்காடு, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் 15.9 விழுக்காடு மற்றும் சபாவில் 14.7 விழுக்காடாகவும் உயரக்கூடும் என முகவர்கள் கணித்துள்ளனர்.








