ECONOMY

தினசரி கோவிட்-19 சம்பவங்கள் 5,000 ஆக உள்ளன

17 ஜூலை 2022, 7:57 AM
தினசரி கோவிட்-19 சம்பவங்கள் 5,000 ஆக உள்ளன

ஷா ஆலம், ஜூலை 17: புதிய கோவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் 5,000 ஆக உள்ளது, நேற்று 5,047 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மொத்தம் தொற்றுகளின் எண்ணிக்கை 4,619,045 ஆக உள்ளது.

கோவிட்நவ் இணையதளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 42,481 ஆக இருந்தது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 42.7 விழுக்காடு அதிகமாகும்.

இதற்கிடையில், மேலும் நான்கு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த வாரம் முதல், சராசரியாக 5.6 பேர் இறந்துள்ளதாகவும், 30 நாட்களுக்கு சராசரியாக 3.9 பேர் இறந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. இது கீழ்நோக்கிய போக்கைக் குறிக்கிறது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.