ECONOMY

தினசரி கோவிட்-19 கிட்டத்தட்ட 4,000 சம்பவங்களாக பதிவு

14 ஜூலை 2022, 3:54 AM
தினசரி கோவிட்-19 கிட்டத்தட்ட 4,000 சம்பவங்களாக பதிவு

ஷா ஆலம், ஜூலை 14: தினசரி கோவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது, நேற்று 3,934 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,604,670 ஆக உள்ளது.

கோவிட்நவ் படி, மொத்தத்தில், 3,927 உள்ளூர் சம்பவங்கள் மற்றும் மீதமுள்ளவை இறக்குமதி சம்பவங்கள்.

இதற்கிடையில், ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன, நோய் தொற்று சம்பவத்தால் மொத்த இறப்பு எண்ணிக்கை 35,828 ஆக உள்ளது.

கடந்த வாரம் ஜூலை 3 முதல் 9 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் கோவிட்-19 இன் புதிய தினசரி சம்பவங்கள் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 27.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஜூன் 26 முதல் ஜூலை 2 வரையிலான 16,694 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது மொத்தம் 21,355 சம்பவங்கள் இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை, 46 லட்சத்துக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் 8,100 இறப்புகளுடன் பதிவாகியுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.