ECONOMY

வரும் ஞாயிறன்று பெட்டாலிங்கில் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்

12 ஜூலை 2022, 11:53 AM
வரும் ஞாயிறன்று பெட்டாலிங்கில் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்

கோம்பாக், ஜூலை 12- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமை பெட்டாலிங்கில் நடைபெறவுள்ளது.

பெட்டாலிங் மாவட்ட நிலையில் நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் எனப்படும் மாநில அரசின் மக்கள் நலத் திட்ட அறிமுக விழாவின் ஒரு பகுதியாக இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

செல்கேட் அமைப்பின் ஏற்பாட்டிலான இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தை முன்கூட்டியே நடத்துவதற்கான தேதியை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். எது எப்படி இருப்பின், வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங்கில் நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் மருத்துவப் பரிசோதனை நிச்சயம் நடத்தப்படும் என்றார் அவர்.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடப்புத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் வரும் 24 ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தில் மீண்டும் நடைபெறும்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் என்ற போலவார்ட் சதுக்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.