ECONOMY

சாலையின் எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது 

11 ஜூலை 2022, 7:02 AM
சாலையின் எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது 

கப்பாளா பாத்தாஸ், ஜூலை 11- தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தை எதிர்த்திசையில் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் பட்டர்வெர்த்-பாகான் ஆஜாம் புற வட்டச் சாலையில் நேற்று விடியற்காலை 12.40 மணியளவில் நிகழ்ந்தது.

இவ்விபத்து தொடர்பில் புகார் செய்வதற்காக நேற்றிரவு 8.39 மணியளவில் செபராங் பிறை உத்தாரா போக்குவரத்து போலீஸ் தலைமையகத்திற்கு வந்த 46 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல் அனுமதியை போலீசார் பட்டர்வெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று பெறுகின்றனர்.

அவ்விபத்து தொடர்பில் ஆடவர் கைது செய்யப்பட்டதை செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ராட்ஸி அகமது உறுதிப்படுத்தினார்.

சாலையின் எதிர்த்திசையில் பயணித்த மிட்ஷுபிஸி டிரைட்டோன் ரக வாகனம் மற்றொரு காரை மோதியதில் அக்காரில் பயணித்த ஆடவரும் பெண்மணியும் காயமடைந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.