ECONOMY

ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பாலத்தில்  12 வாகனங்களை மோதிய லாரி டிரைவர் கைது

7 ஜூலை 2022, 9:51 AM
ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பாலத்தில்  12 வாகனங்களை மோதிய லாரி டிரைவர் கைது

ஷா ஆலம், ஜூலை 7: ஜோகூர்-சிங்கப்பூர் இடையேயான பாலத்தில்  இன்று காலை 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயது லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரியின் தொழில்நுட்பக் கோளாறால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என ஜோகூர் பாரு செலாத்தான் காவல்துறைத் தலைவர் கூறியதாக கொஸ்மோ ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறு வாகனங்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டவை என்றும், மற்றவை சிங்கப்பூர் பதிவு எண்களை கொண்டது என்றும் உதவி ஆணையர் ரவூப் செலாமாட் விளக்கினார்.

"ஒரு லாரி, ஒரு பஸ், ஒரு வேன் மற்றும் ஒன்பது கார்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள். இருப்பினும், (விபத்தில்) உயிர் இழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை, ”என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 42ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.