ECONOMY

அம்பாங் கெஅடிலான் தொகுதி மறு தேர்தல்- ஹான்ஸ் ஐசாக் வெற்றியாளராக தேர்வு

1 ஜூலை 2022, 2:45 PM
அம்பாங் கெஅடிலான் தொகுதி மறு தேர்தல்- ஹான்ஸ் ஐசாக் வெற்றியாளராக தேர்வு

ஷா ஆலம், ஜூலை 1- இவ்வாரம் புதன் கிழமை நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் அம்பாங் தொகுதிக்கான மறு தேர்தலில் பிரபல நடிகரும் இயக்குநருமான டத்தோ ஹான்ஸ் ஐசாக் வெற்றி பெற்றார்.

ஜெரால்டு ஹான்ஸ் ஐசாக் என்ற இயற்பெயரைக் கொண்ட 51 வயதான ஹான்ஸ் இத்தேர்தலில் 748 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு போட்டியாளரான சைட் அகமது சைட் அப்துல் ரஹ்மான் (வயது 43) ஹான்ஸை விட இரண்டு வாக்குகள் குறைவாகப் பெற்று நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டார்.

இதரப் போட்டியாளர்களான அப்துல்லா முகமது ஜைனுக்கு 101 வாக்குகளும் சாம் ஹூ வாய்க்கு 70 வாக்குகளும் அப்துல் லத்திப் ஷாரிக்கு 10 வாக்குகளும் கிடைத்தன. மற்றொரு வேட்பாளரான அப்துல் ஹலிம் முகமது யூசுப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற அந்த தொகுதிக்கான தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அங்கு மறு தேர்தல் நடத்தப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.