ECONOMY

நாட்டில் நேற்று 2,302 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு

26 ஜூன் 2022, 1:12 PM
நாட்டில் நேற்று 2,302 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு

ஷா ஆலம், ஜூன் 26- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 2,302 பேர் பாதிக்கப்பட்டனர்.

இம்மாதம் 22 ஆம் தேதி 2,425 பேரும் 23 ஆம் தேதி 2,796 பேரும் 24 ஆம் தேதி 2,512 பேரும் இந்நோய்க்கு இலக்கானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 54 ஆயிரத்து 661 பேராக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 28,010 பேர் நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்களில் 26,926 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 16 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்திலும் 1,047 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்நோய்க்கு இதுவரைப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,745 ஆக பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.