ECONOMY

கெஅடிலான் தேசிய காங்கிரஸ் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது

11 ஜூன் 2022, 6:39 AM
கெஅடிலான் தேசிய காங்கிரஸ் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது

ஷா ஆலம், ஜூன் 11: இம்மாத இறுதியில் இங்குள்ள ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் (ஐடிசிசி) நடைபெறவிருந்த 16வது தேசிய காங்கிரஸின் தேதியை கெஅடிலான் மக்கள் கட்சி (கெஅடிலான்) ஜூலை 15 முதல் 17 வரை ஒத்திவைத்துள்ளது.

கட்சித் தேர்தல் புகார்கள் தொடர்பாக கட்சித் தேர்வுக் குழுவின் (ஜேபிபி)  அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய கெஅடிலான் மத்திய தலைமைத்துவ மன்றத்திற்க்கு (எம்பிபி) இடமளிக்க இந்த  ஒத்திவைப்பு  என அதன் பொதுச் செயலாளர் கூறினார்.

புதிய கிளைத் தலைமைக்கு நியமனங்களைச் செய்ய கால அவகாசம் வழங்குவதைத் தவிர எழுப்பப்பட்ட பல விஷயங்களைத் தீர்ப்பதற்கு எஸ்ஆர்சியின் காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

“மத்திய கெஅடிலான் இளைஞர் காங்கிரஸும், மத்திய கெஅடிலான் மகளிர் காங்கிரஸும் ஒரே நேரத்தில் ஜூலை 15ஆம் தேதி ஐடிசிசியில் நடைபெறும் என்று அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூன் 24 முதல் 26 வரை மாநாடு நடைபெறுவதாக இருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.