ECONOMY

 அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்க அம்பாங் ஜெயாவிலுள்ள 30,000 சொத்து உரிமையாளர்களுக்கு வாய்ப்பு

26 மே 2022, 8:21 AM
 அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்க அம்பாங் ஜெயாவிலுள்ள 30,000 சொத்து உரிமையாளர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், மே 26- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் மதிப்பீட்டு வரிக்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கு பெறுவதற்கு  29,207 சொத்து உரிமையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

நகராண்மைக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான அதிர்ஷ்டக் குலுக்கிற்கு 75 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத்தின் தொடர்பு அதிகாரி நோர்ஹயாத்தி அகமது கூறினார்.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கின் வெற்றியாளர்களுக்கு தெர்மோமிக்ஸ், ஐபேட் புரோ மற்றும் மின்சார சைக்கிள் பரிசாக வழங்கப்படும். மே மாதத்திற்கான பரிசாக மைவி காருடன் மேலும் 35 மாதாந்திர பரிசுகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த அதிர்ஷ்டக் குலுக்கு நிகழ்வு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மெனாரா எம்.பி.ஏ.ஜே நான்காவது மாடியில் நடைபெறும்.

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.