ECONOMY

 நாட்டில் 30.6 விழுக்காட்டுச் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

20 மே 2022, 6:52 AM
 நாட்டில் 30.6 விழுக்காட்டுச் சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், மே 20 - சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) கீழ் நாட்டில் மொத்தம் 10 லட்சத்து 85 ஆயிரத்து 977 பேர்  அல்லது 30.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில்  16 லட்சத்து 57 ஆயிரத்து 180 பேர் அல்லது 46.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில்  29 லட்சத்து 7 ஆயிரத்து 463  பேர் அல்லது 93.4 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 30 லட்சத்து 4 ஆயிரத்து 613 பேர்  அல்லது 96.5 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பெரியவர்களைப் பொறுத்தவரை,  1 கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 262 பேர் அல்லது  68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, 2 கோடியே 29 லட்சத்து 72 ஆயிரத்து 212 பேர்  அல்லது 97.6 விழுக்காட்டினர்  இரண்டு டோஸ் தடுப்பூசியை  முழுமையாகப் பெற்ற வேளையில்   2 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 104 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு  குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று, மொத்தம் 12,667 கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவற்றில் 4,384 முதல் டோஸ், 5,188 இரண்டாவது டோஸ் மற்றும் 3,095 பூஸ்டர் டோஸ் ஆகும். இதனுடன் சேர்த்து பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை  7 கோடியே 07 லட்சத்து  37 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கிட்ஹப் அகப்பக்கத்தின் தகவலின்படி ,நேற்று மூன்று கோவிட்-19 தொடர்புடைய மரணங்கள்  பதிவாகியுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.