ECONOMY

நாட்டின் 30.4 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

19 மே 2022, 10:22 AM
நாட்டின் 30.4 விழுக்காடு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 19: நேற்றைய நிலவரப்படி நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் (பிக்கிட்ஸ்) ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 1,079,745 பேர் அல்லது 30.4 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி மொத்தம் 16 லட்சத்து 53 ஆயிரத்து 491 சிறார்கள் அல்லது 46.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், 29 லட்சத்து 6 ஆயிரத்து 702 பேர் அல்லது 93.4 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 30 லட்சத்து 3 ஆயிரத்து 996 பேர் அல்லது 96.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 60 லட்சத்து 71 ஆயிரத்து 981 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர், 2 கோடியே 29 லட்சத்து 71 ஆயிரத்து 916 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களை முடித்துள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 47 ஆயிரத்து 755 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தினசரி டோஸ்களைப் பொறுத்தவரை, 3,254 முதல் டோஸ்கள், 5,266 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 2,461 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 10,981 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 7 கோடியே 7 லட்சத்து 22 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின்படி, கோவிட்-19 காரணமாக நேற்று ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.