ECONOMY

சிலாங்கூரில் பள்ளி பழுதுபார்க்கும் பணிக்காக 80,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் கைது

18 மே 2022, 8:32 AM
சிலாங்கூரில் பள்ளி பழுதுபார்க்கும் பணிக்காக 80,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் கைது

கோலாலம்பூர், மே 18 - சிலாங்கூரில் உள்ள பள்ளி ஒன்றில் பழுதுபார்க்கும் பணிக்காக 80,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக அரசு நிறுவன உதவிப் பொறியாளர் ஒருவர் பிடிபட்டார்.

நேற்று மாலை 4 மணியளவில் பாங்கியில் உள்ள உணவகம் ஒன்றில் மற்றொரு நபரிடமிருந்து RM10,000 லஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் 35 வயது நபர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய அதிகாரிகள் குழு அவரை கைது செய்தது.

சிலாங்கூர் எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமைத் தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதி செய்து, இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம்  செக்சென் 17 (ஏ) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாக கூறினார்.

தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதற்காக அந்த நபர் இன்று ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று அவர் கூறினார்

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.