ECONOMY

சுக்மா 2022- சிலாங்கூர் பங்கேற்கும் போட்டிகள் தொடர்பில் மாநில அரசு-எம்.எஸ்.என் பேச்சுவார்த்தை

28 ஏப்ரல் 2022, 7:10 AM
சுக்மா 2022- சிலாங்கூர் பங்கேற்கும் போட்டிகள் தொடர்பில் மாநில அரசு-எம்.எஸ்.என் பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், ஏப் 28- மலேசிய போட்டி விளையாட்டுகளில் (சுக்மா 2022) சிலாங்கூர் பங்கேற்கும் போட்டிகள் குறித்து மாநில அரசும் சிலாங்கூர் விளையாட்டு மன்றமும் (எம்.எஸ்.என்.) விவாதித்து வருகின்றன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் பொருளாதார சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதில் மற்ற மாநிலங்களைப் போலவே நாமும் சில சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். பெருந்தொற்று பரவல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

புக்கிட் கியாராவிலுள்ள தேசிய விளையாட்டாளர் சமூக நல வாரியத்தில் விளையாட்டாளர்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுக்மா 2022 போட்டியில் 60 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்க சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.