ECONOMY

பேரரசர் தம்பதியரின் சித்திரைப் புத்தாண்டு, வைசாக் வாழ்த்துகள்

14 ஏப்ரல் 2022, 7:59 AM
பேரரசர் தம்பதியரின் சித்திரைப் புத்தாண்டு, வைசாக் வாழ்த்துகள்

கோலாலம்பூர், ஏப் 14 - மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர்   நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கு சித்திரைப் புத்தாண்டு மற்றும் வைசாக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அவ்விரு சமூகங்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ்க்கையை வாழ தாங்கள் வாழ்த்துவதாக பேரரசர் தம்பதியர் இஸ்தானா நெகாரா முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பண்டிகை மலேசியாவில் உள்ள தமிழ் மற்றும் சீக்கிய சமூகத்தினருக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரட்டும் என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை என்பது தமிழ் சமூகத்தின் புத்தாண்டு தினமாகும். அதே சமயம் சீக்கியர்களுக்கு வைசாக் புத்தாண்டு கொண்டாட்டமாக அமைகிறது.  இவ்விரு பண்டிகைகளும் இன்று கொண்டாடப்படுகின்றன

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.