ECONOMY

பெண்களைப் மானபங்கப்படுத்தியதாக 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு

13 ஏப்ரல் 2022, 9:55 AM
பெண்களைப் மானபங்கப்படுத்தியதாக 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஏப் 12- கடந்த டிசம்பர் மாதமும் இம்மாதமும் சைபர் ஜெயா, தாமரிண்ட் சதுக்கத்தில் மூன்று பெண்களை மானபங்கப்படுத்தியதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 20 வயது இளைஞர் மறுத்து விசாரணை கோரினார்.

சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  நேற்று மாஜிஸ்திரேட் அயுனி இஸாத்தி சுலைமான் முன்னிலையில் தண்டனை சட்டத்தின் 354 வது பிரிவின் கீழ் அந்த இளைஞருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை 11.46 மணியளவில் தாமரிண்ட் சதுக்கத்தில் 32 பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி 35 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களிடம் இதே குற்றத்தைப் புரிந்ததாகவும் அவ்விளைஞருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை வழக்கு முடியும் வரை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட்  மாதம் ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்பதோடு வரும் ஜூன் 30 ஆம் தேதி அடுத்த வழக்கு நடைபெறும் வரை சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சுறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.