ECONOMY

குப்பைத் தொட்டியில் சிசுவின் சடலம்- காதல் ஜோடி கைது

8 ஏப்ரல் 2022, 4:29 AM
குப்பைத் தொட்டியில் சிசுவின் சடலம்- காதல் ஜோடி கைது

ஷா ஆலம், ஏப் 8- பண்டார் பாரு கிள்ளானில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் குப்பைத் தொட்டியில் நான்கு மாதமே நிரம்பிய ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சிசுவின் சடலத்தை ஆடவர் ஒருவர் நேற்று மாலை 3.00 மணியளவில் கண்டு போலீசுக்கு தகவல் தந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் கூறினார்.

கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அக்குழந்தை 24 மணி நேரத்திற்கு முன்னர் மரணமடைந்தது தெரியவந்தது என்று அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் 30 வயது மதிக்கத்தக்க அந்நிய நாட்டுப் பெண்ணையும் 40 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவரையும் சம்பவ இடத்திற்கு அருகில் தாங்கள் கைது செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக கூறிய அவர், தொடர் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவ்விருக்கும் எதிரான தடுப்புக்காவல் ஆணை நீதிமன்றத்தில் பெறப்படும் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.