ECONOMY

நேற்று வரை 22,476 சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

5 ஏப்ரல் 2022, 3:25 AM
நேற்று வரை 22,476 சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஏப் 5- நாட்டில் நேற்று வரை 22,476 சிறார்கள் “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

5 முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில் 38 விழுக்காட்டினர் அல்லது 13 லட்சத்து 51 ஆயிரத்து 441 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக  கோவிட்நாவ் அகப்பக்கம்  தெரிவித்தது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களில் 91.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 54 ஆயிரத்து 727 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 94.9 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 49 ஆயிரத்து 995 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரியவர்களைப் பொறுத்த வரை 1 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 983 பேர் அல்லது 67.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றனர். 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 55 ஆயிரத்து 496 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 22,081 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 2,630 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 8,155 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 11,296 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 90 லட்சத்து 16 ஆயிரத்து 063 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 28 மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.