ECONOMY

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற சிறார்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் இரு மடங்கு அதிகரிப்பு

4 ஏப்ரல் 2022, 12:20 PM
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற சிறார்கள் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் இரு மடங்கு அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 4- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற சிறார்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான 14,949 சிறார்கள் நேற்று இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று முன்தினம் வரை 6,129 சிறார்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கையும் நேற்று வரை 13 லட்சத்து 48 ஆயிரத்து 693 ஆக உயர்வு கண்டுள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களில் 91.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 53 ஆயிரத்து 735 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 94.8 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 49 ஆயிரத்து 653 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரியவர்களைப் பொறுத்த வரை 1 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரத்து 917 பேர் அல்லது 67.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றனர். 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 54 ஆயிரத்து 771 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 15,708 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 2,178 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 9,277 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,253 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.