ஷா ஆலம், மார்ச் 31: சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில் உள்ள சபாக் பெர்ணாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இடங்களில் மழைக்கான சூழ்நிலை ஏற்படும் என்று ட்விட்டர் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளும் இதே நிலையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேராக்கில் இருக்கும், மஞ்சோங், மத்திய பேராக், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்; பகாங் மாநிலத்தில் மாரான், குவாந்தான் மற்றும் பெக்கான், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிரம்பான், போர்ட் டிக்சன் மற்றும் ரெம்பாவ் அத்துடன் சரவாக் மாநிலத்தில் சரிகேய், சிபு (கனோவிட் மற்றும் செலாங்காவ் முக்கா ,தஞ்சூங் மானிஸ்) மற்றும் மிரி).
மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/மணி நேரம்) அதிகமாக இருக்கும் போது எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.
சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.








