ECONOMY

கிட் சியாங் அரசியல் ஓய்வு- நன்றியைப் புலப்படுத்தினார் அன்வார்

21 மார்ச் 2022, 2:37 AM
கிட் சியாங் அரசியல் ஓய்வு- நன்றியைப் புலப்படுத்தினார் அன்வார்

ஷா ஆலம், மார்ச் 21- அரசியலிலிருந்து ஓய்வு பெறும் ஜ.செ.க. கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியை புலப்படுத்திக் கொண்டார்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் கெஅடிலான், ஜ.செ.க. அமானா, அப்கோ கட்சிகள் தொடர்ந்து ஈடுபடும் என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங் இதுவரை புரிந்த தியாகங்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

நேற்று  ஷா ஆலமில் நடைபெற்ற ஜ.செ.க. வின் 17வது பேராளர் மாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் கலந்து கொண்டார்.

அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக  81 வயதான கிட் சியாங் நேற்று அறிவித்தார்.  இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், கட்சியின் உச்சமன்றத்திற்கு போட்டியிடுவதிலிருந்தும் விலகினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.