ECONOMY

பி40 தரப்பினர் கட்டுப்படி விலை வீடுகளைப் பெறும் வாய்ப்பு விரிவாக்கப்பட வேண்டும்- சுல்தான் வேண்டுகோள்

14 மார்ச் 2022, 12:43 PM
பி40 தரப்பினர் கட்டுப்படி விலை வீடுகளைப் பெறும் வாய்ப்பு விரிவாக்கப்பட வேண்டும்- சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 14- பொதுமக்களுக்குக் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் கட்டுப்படி விலையிலான வீடுகளை வாங்குவதற்குரிய வாய்ப்பினை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு ஏற்ற வகையில் பொருத்தமான கடனுதவித் திட்டங்களும் வழங்கப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

இதன் வழி மக்கள் பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட குடியிருப்பை பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் வாயிலாக ரூமா சிலாங்கூர்கூ ஹராப்பான் மற்றும் ரூமா இடாமான் திட்டங்கள் வழி 84,192 வீடுகளை உள்ளடக்கிய 49 வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.