ECONOMY

நாட்டில் 1.5 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

9 மார்ச் 2022, 2:44 AM
நாட்டில் 1.5 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 9- நாட்டில் நேற்று வரை பெரியவர்களில் 64.2 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 923 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரத்து 441 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரத்து 220 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து  32 ஆயிரத்து 567 பேர் அல்லது 90.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 29 லட்சத்து 616 பேர் அல்லது 93.2 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 27.4 விழுக்காட்டினர் அல்லது 10 லட்சத்து 60 ஆயிரத்து 063 பேர் அல்லது 29.9 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 91 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 32 ஆயிரத்து 919 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 94.2 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 33 ஆயிரத்து 324 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

இதனிடையே, நேற்று 68,624 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 19,511  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,835 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 47,278  பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 79 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாகச் சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.