ECONOMY

பிளாசா மலாலாமில்  நாளை நடமாடும் எம்.பி.எஸ்.ஏ அலுவலகம்

4 பிப்ரவரி 2022, 6:40 AM
பிளாசா மலாலாமில்  நாளை நடமாடும் எம்.பி.எஸ்.ஏ அலுவலகம்

ஷா ஆலம், பிப் 4- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம் நாளை இங்குள்ள செக்சன் 9, விஸ்மா மசாலாமில் செயல்படும்.

“ஷா ஆலம் ஓன் வீல்ஸ்“ எனும் இச்சேவை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்களை முகப்பிடங்களுக்கு வரவேண்டிய அவசியமின்றி வார இறுதி நாட்களில் எளிதாக மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

மதிப்பீட்டு வரியை சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களை சரி பார்த்து செலுத்துவது ஆகியவை தவிர்த்து லைசென்ஸ் நிலையை அறிந்து கொள்வது மற்றும் புகார் செய்வது ஆகிய சேவைகளையும் இங்கு பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி மக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் ஆக்ககரமானதாக ஆக்க முடியும் என மாநகர் மன்றம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.