ஷா ஆலம், பிப் 1- சிலாங்கூரிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இம்மாதம் 5 ஆம் தேதி முதல் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.பருவமழை காரணமாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் கூனோங் நுவாங் பகுதியில் மட்டும் மலையேறும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சிலாங்கூர் மாநில வன இலாகா தனது முகநூல் பதிவில் கூறியது.
மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.
சிலாங்கூர் தெங்கா பகுதியைப் பொறுத்தவரை கூனோங் ஹீத்தாம், புக்கிட்
செனுவாங், சுங்கை செப்போ நீர் வீழ்ச்சி, புக்கிட் சாகா, புக்கி ஆப்பே, புக்கிட் புரோகா, புக்கிட் கெம்பாரா,உலு பெர்டிக் நீர்வீழ்ச்சி, சுங்கை பீசாங் நீர்வீழ்ச்சி, சோப்பியா ஜீன் நீர் வீழ்ச்சி, லூபோக் தூடோங் நீர் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
உலு சிலாங்கூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கூனோங் உலு செமாங்கோ, புக்கிட் சொரோக்கோ, புக்கிட் கூட்டு, லதா மேடாங் நீர் வீழ்ச்சி, லதா மக்காவ் நீர் வீழ்ச்சி, செதிங்கி நீர்வீழ்ச்சி, லுபோக் காவா நீர் வீழ்ச்சி ஆகியவை மலையேறும் நடவடிக்கைகளுக்கு அறுமதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
இப்பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் தேதி தொடங்கி மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
ECONOMY
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலையேறுவோருக்கு பிப்.5 முதல் அனுமதி
1 பிப்ரவரி 2022, 2:22 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

உங்கள் கருத்து என்ன?




