ECONOMY

பெட்டாலிங், கிள்ளானில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

27 ஜனவரி 2022, 10:01 AM
பெட்டாலிங், கிள்ளானில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஜன 27- இங்குள்ள செக்சன் 15 பகுதியில் நேற்றுமுன்தினம் குழாய் உடைந்ததால் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டத்தின் 142 பகுதிகளில் ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடை இன்று காலை 7.00 மணியளவில் முழுமையாக சீரடைந்தது.

அட்டவணையிடப்படாத அந்த நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்ததோடு ஒத்துழைப்பும் நல்கிய பயனீட்டாளர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பஸேரி கூறினார்.

கூட்டரசு  நெடுஞ்சாலை அருகே மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணியின் போது செக்சன் 15 பகுதியில் குடிநீர் விநியோகக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களின் 142 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.