ECONOMY

சுங்கை துவா தொகுதி  சேவை மையத்தின் வழி  பத்து கேவ்ஸ் எப்.சி. கால்பந்து குழுவுக்கு 1,500 வெள்ளி மானியம்

12 டிசம்பர் 2021, 6:59 AM
சுங்கை துவா தொகுதி  சேவை மையத்தின் வழி  பத்து கேவ்ஸ் எப்.சி. கால்பந்து குழுவுக்கு 1,500 வெள்ளி மானியம்

கோம்பாக், டிச 12- சுங்கை துவா தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக தொகுதி சேவை மையத்தின் வாயிலாக  பல்வேறு  உதவி திட்டங்களுக்கு  நிதி வழங்கிய சுங்கை துவா  சட்டமன்ற உறுப்பினரும்  மாநில மந்திரி புசாருமாகிய  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  பத்து கேவ்ஸ் எப்.சி. கால்பந்து குழுவுக்கும்  மானியம் வழங்கினார்

இந்த நிதியுதவித் திட்டம் தனது மாதாந்திர நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பத்து கேவ்ஸ் எப்.சி. கால்பந்து குழுவுக்கு 1,500 வெள்ளி மானியம் வழங்கியதற்காக அந்த கிளப்பின் தலைவர் செல்வராஜ் (வயது 55) மந்திரி புசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிதியைக் கொண்டு புல் வெட்டும் இயந்திரம் வாங்கப்படும் எனக் கூறிய அவர், இம்மாதம் 26 ஆம் பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெறவிருக்கும் மூத்த குடிமக்களுக்கான கால்பந்து போட்டிக்காக திடலை சுத்தம் செய்ய இந்த இயந்திரம் பேருதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.