ECONOMY

அறிவிப்பு பலகையில் ஏற்பட்ட அச்சுப் பிழையை சரி செய்தது கோல சிலாங்கூர் கெஅடிலான்

10 டிசம்பர் 2021, 10:08 AM
அறிவிப்பு பலகையில் ஏற்பட்ட அச்சுப் பிழையை சரி செய்தது கோல சிலாங்கூர் கெஅடிலான்

ஷா ஆலம், டிச 10- கெஅடிலான் கட்சியின் கிளை அறிவிப்பு பலகைகளில்  ஏற்பட்ட அச்சுப் பிழையை அக்கட்சியின் கோல சிலாங்கூர் தொகுதி உடனடியாக சரி செய்தது.

அத்தவறுக்காக தாங்கள் வருத்தமடைவதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாக கோல சிலாங்கூர் தொகுதி  கெஅடிலான் தலைவர் ஜூய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்ட கிளைகளின் பெயரை குறிக்கும் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றுள்ள மொழியில் ஏற்பட்ட தவறு குறித்து நான் வருந்துகிறேன். அந்த தவற்றை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அந்த அறிவிப்பு பலகையில் மலாய், ஜாவி, சீனம் ஆகிய மொழிகளோடு இடம் பெற வேண்டிய தமிழ் மொழி விடுபட்டிருந்தது. 

கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி எப்போதும் நீதி மற்றும் அக்கறை காட்டல் கோட்பாடுகள் மீது கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பல்லின மற்றும் சமயங்களுக்கு உரிய மரியாதையும் வழங்கி வருகிறது என்று ஜூவாய்ரியா சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.