ECONOMY

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா சிறப்புரை- தொடர்ந்து ஆதரிப்போம்.

5 டிசம்பர் 2021, 2:13 PM
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா சிறப்புரை- தொடர்ந்து ஆதரிப்போம்.

பெட்டாலிங் ஜெயா டிச 5 ;- சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சியின் சார்பில் , பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் கோலகலமாக தொடங்கியது " தீபாவளி கிறிஸ்துமஸ் " சிலாங்கூர் மந்திரி புசார் வருகையைத் தொடர்ந்து  சிறப்பு விருந்து நிகழ்வு இரவு 8.40க்கு  தொடங்கியது.

இந்த நிகழ்வில் செலாயங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் முக்கிய பிரமுகராக கலந்துக் கொண்டார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா சிறப்புரையாற்றினார்.

இன்றைய நிகழ்வில் கலந்துக்  கொண்டவர்கள், சிலாங்கூர் மாநில தேர்தல் இயந்திரம் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். மாநில அரசாங்கம் பாகுபாடின்றி நீதியாக செயல் படுவதற்கு தென்னமரத் தோட்ட  இந்திய விவசாயிகளின் நிலம், மற்றும்  இந்திய தொழிற்துறையினர் மேம்பாட்டுக்கு வழங்கியுள்ள ஐ- சீட் மற்றும் சித்தம் உதவிகளையும் நினைவு கூர்ந்தனர்.

சிலாங்கூர் மாநில இந்திய சமுதாயத்தின் வாக்குகளை மக்கள் நீதிக் கட்சிக்கு பெற்றுத்தருவது நாட்டில் மற்ற மாநிலங்களிலும் இந்திய சமுதாய உயர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.

சிலாங்கூர் மாநில இந்திய சமுதாயத்தின் வாக்குகளை மக்கள் நீதிக் கட்சிக்கு பெற்று தருவதை இந்திய தலைவர்கள்  உறுதி செய்ய  கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.