ECONOMY

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகள் சிறப்பிக்கப்பட்டன,

4 டிசம்பர் 2021, 2:24 AM
சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகள் சிறப்பிக்கப்பட்டன,

ஷா ஆலம் 4 டிச ;- சிலாங்கூர் மந்திரி புசார் தலைமையில் யூ.பி.எஸ்ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைந்த 337 மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி மூன்று நாட்களுக்கு ஷா ஆலம் டேவான் பெங்குவட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர் சமூக பொருளாதார மேம்பாடு சமூக நலன் தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் போர்ட் கிளாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸம் ஜமான் ஹுரி, ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் ஆசிரியர்கள்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்

நடமாட்ட கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்ட   இந்நிகழ்வுக்கு  சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சங்க தலைவர் டாக்டர் கன்னியப்பன், ஷா ஆலம் தமிழர் சங்க தலைவர் திரு சீரிய நாதன்,  மாநகர மன்ற மற்றும் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராம தலைவர்கள், முன்னால் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.

இந்த மூன்று நாள் தொடர் நிகழ்வில் ஒரு பகுதியாக முதல் நாள் சிறந்த மூன்று சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கும்  5 ஆசிரியர் திலகங்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மந்திரி புசார் சார்பில் கௌரவிப்புக்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் மற்றும்  மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் செய்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.