ECONOMY

மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் “இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங்“ என பெயர் மாற்றம்

29 நவம்பர் 2021, 2:37 PM
மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் “இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங்“ என பெயர் மாற்றம்

ஷா ஆலம், நவ 29- கடந்த 13 ஆம் ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டம் இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங்“ திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அமலாக்கத்தை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வந்ததோடு காலத்தின் தேவைக்கேற்ப புதிய அணுகுமுறைகளையும் புகுத்தி வந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிலைநிறுத்தும் அதேவேளையில்  மக்களுக்கு ஆக்ககரமான முறையில் சேவையாற்றுவதற்கு ஏதுவாக அதன் தரத்தையும் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் இத்திட்டங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டு இல்திசாம் சிலாங்கூர்  பென்யாயாங் (சிலாங்கூர் பரிவு அர்ப்பணிப்புத் திட்டம்) என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சமூக பாதுகாப்பு ஒருங்கமைப்பாக விளங்கக்கூடிய இத்திட்டத்தின் வழி அனைத்து சமூக நலத் திட்டங்களும் ஒருங்கிணைக்கப்படும் எனக் கூறிய அவர், இந்நோக்கத்திற்காக 30 கோடியே 5 லட்சத்து 19 ஆயிரம் வெள்ளி அடுத்தாண்டில் ஒதுக்கப்படுகிறது என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.