ECONOMY

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம்- சனியன்று ஏயோன் மாலில் செயல்படும்

18 நவம்பர் 2021, 9:11 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம்- சனியன்று ஏயோன் மாலில் செயல்படும்

ஷா ஆலம், நவ 18- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் அலுவலகம் வரும் சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 13, ஏயோன் மால் அருகே உள்ள திறந்த வெளி கார் நிறுத்துமிடத்தில் செயல்படும்.

காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றத்துடனான தங்கள் அலுவல்களை பொதுமக்கள் வார இறுதி நாட்களில் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த சேவை வழங்கப்படுகிறது  அவர் சொன்னார்.

மதிப்பீட்டு வரியை சரிபார்த்தல் மற்றும் செலுத்துதல், வாகன நிறுத்துமிட அபராதத் தொகையை சரிபார்த்தல் மற்றும் செலுத்துதல் மற்றும் புகார்களைத் தெரிவித்தல் போன்ற சேவைகள் இந்த நடமாடும் அலுவலத்தில் வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு மேலும் ஆக்ககரமான முறையில் சேவையை வழங்குவதற்கு மாநகர் மன்றத்தின் இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.