ECONOMY

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு வெ. 21.9 லட்சம் ஒதுக்கீடு- கணபதிராவ் தகவல்

11 நவம்பர் 2021, 7:55 AM
வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு வெ. 21.9 லட்சம் ஒதுக்கீடு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், நவ 11- வறுமை ஒழிப்பு பெருந்திட்ட உதவி திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் 21 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாதம் வரை வர்த்தக உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 529 பேர் பயனடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை இத்திட்டத்திற்கு 1 கோடியே 66 லட்சம் வெள்ளி செலவிடப்பட்ட வேளையில் இந்த நிதியுதவியின் வாயிலாக 5,035 வணிகர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வருமானத்தை ஈட்டுவதற்கு உதவக் கூடிய பல்வேறு உதவித் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை அது ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றார் அவர்.

உலு லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகத்தில் துணியின் ஓரம் தைக்கும் இயந்திரத்தை நோர் ஃபராலியா முகமது ஹபிசிடம் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருதொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உதவித் திட்டங்களின் வாயிலாக அவர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

வணிகர்களுக்கு அவர்களின் வர்த்தக தேவைக்கு ஏற்ற உகரணங்களை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த வறுமை ஒழிப்பு பெருந்திட்டம் கடத்ந 2008ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.