ECONOMY

கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் 30 சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள் அன்பளிப்பு

29 அக்டோபர் 2021, 5:51 AM
கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் 30 சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள் அன்பளிப்பு

கிள்ளான், அக் 29- கெஅடிலான் ராக்யாட் எனப்படும் மக்கள் நீதிக்கட்சியின் கோத்தா ராஜா தொகுதி இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 30 சிறார்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பாரம்பரிய உடைகளும் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

கிள்ளான், துங்கு கிளானா ஸ்ரீ குமரன்ஸ் ஜவுளி நிலையத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினரும் கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி துணைத் தலைவருமான ஜவாவி முக்னி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 15 வயதுக்கும் கீழ்ப்பட்ட 30 சிறார்கள் தொகுதி பொறுப்பாளர்களிடமிருந்து ஜிப்பா போன்ற பாரம்பரிய உடைகளையும் பண அன்பளிப்பையும் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் அச்சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இத்திட்ட இயக்குநர் கிருஷ்ணராஜ், தொகுதி இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ஹஸ்ரா ஷரிசாட் மற்றும் முரளி தாஸ், பவித்ரா தேவி ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.