ECONOMY

செந்தோசா தொகுதி மக்களுக்கு வெ. 12,000 மதிப்பில் தீபாவளி உதவித் திட்டங்கள்

26 அக்டோபர் 2021, 3:34 AM
செந்தோசா தொகுதி மக்களுக்கு வெ. 12,000 மதிப்பில் தீபாவளி உதவித் திட்டங்கள்

ஷா ஆலம், அக் 26- தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு 12,000 வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டங்கள் மற்றும் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது 60 நாட்களில் ஆரோக்கிய வாழ்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் அவர் ஒப்படைத்தார்.

கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அவர், கெஅடிலான் சிலாங்கூர் தீபாவளி சுற்றுபயணத் திட்டத்தையும் இங்குள்ள செந்தோசா தொகுதி சேவை மையத்தில் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார், புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர்  ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாநிலத்திலுள்ள 22 தொகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் கெஅடிலான் தீபாவளி சுற்றுப்பயண நிகழ்வு நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.