ECONOMY

இணையம் வழி வர்த்தக லைசென்சை புதுப்பிக்க சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஆலோசனை

29 செப்டெம்பர் 2021, 9:14 AM
இணையம் வழி வர்த்தக லைசென்சை புதுப்பிக்க சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஆலோசனை

ஷா ஆலம், செப் 29- அடுத்த ஆண்டிற்கான வர்த்தக மற்றும் விளம்பர லைசென்ஸ்களை இணையம் வாயிலாக புதுப்பிக்கும்படி வணிகர்களுக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

இத்தகைய லைசென்ஸ் புதுப்பிப்பு பணிகளை https://ezy.mbsa.my/lesen என்ற அகப்பக்கம் வாயிலாக அடுத்த மாதம் முதல் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

தற்போதைய நோய்த் தொற்று காலத்தில் நேரடியாக முகப்பிடங்களுக்கு வந்து கட்டணங்களை செலுத்துவதைக் காட்டிலும் புதிய இயல்பில் இணையம் வாயிலாக இப்பணிகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக நேரத்தையும் செலவுகளையம் குறைக்க முடியும் என்பதோடு நேர வரம்பின்றி எந்த நேரத்திலும் கட்டணத்தை செலுத்த முடியும் என்றார் அவர்.

இன்று நடைபெற்ற சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முழு அளவிலான கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையம் வாயிலாக கட்டணத்தைச் செலுத்துவதற்கான வழிமுறைகள் அந்த அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.