ஷா ஆலம், ஆக 16- இங்குள்ள ஐ-சிட்டியில் அமைந்திருக்கும் ரெட் கார்ப்பெட் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் சீன கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரின் சிலை உள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலை ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.அந்த அருங்காட்சியகத்தில் தங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அத்தகைய சிலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் அந்த அருங்காட்சியகம் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை மேலும் தெரிவித்தது.
எந்த தகவலையும் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை நன்கு ஆராயும்படி சம்பந்தபட்ட தரப்பினரை மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.
ECONOMY
ஐ-சிட்டியில் கம்யூனிஸ்டு தலைவரின் மெழுகுச் சிலையா? ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுப்பு
16 ஆகஸ்ட் 2021, 6:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



