ECONOMY

செலங்கா வழி செல்வேக்ஸ் தடுப்பூசிக்கு பதியும் எளிய முறை- காணொளியை பகிர்ந்து கொண்டார் மந்திரி புசார்

10 ஆகஸ்ட் 2021, 10:28 AM
செலங்கா வழி செல்வேக்ஸ் தடுப்பூசிக்கு பதியும் எளிய முறை- காணொளியை பகிர்ந்து கொண்டார் மந்திரி புசார்

ஷா ஆலம், ஆக 10- செலங்கா செயலி வாயிலாக செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு பதிந்து கொள்றுமாறு பொதுமக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் நோக்கில் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இன்னும் தடுப்பூசியைப் பெறாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பெறுவதற்கு  பதிவு செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

வருகைக்கான முன்பதிவு இன்றி நேரடியாக சென்று தடுப்பூசி பெறும்  நடைமுறை எளிதானதாகவும் விரைவாக மேற்கொள்ளக்கூடியதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்கு செலங்கா செயலியில் பதிவு செய்யும் முறையை விவரிக்கும் காணொளி ஒன்றை அவர் தனது  முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வழி முறை பின் வருமாறு-

  1. செலங்கா செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யாதவர்கள் பிளேய்ஸ்டோர் அல்லது ஏப்ஸ்டோர் வழி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. என்ற “VAX” வார்த்தையை அழுத்த வேண்டும்
  3. temu janji என்ற வார்த்தையை அழுத்த வேண்டும்
  4. semak temu janji என்ற வார்த்தையை அழுத்த வேண்டும்
  5. ஊதா வண்ண கட்டத்தை அழுத்த வேண்டும்
  6. அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கான பற்றுச்சீட்டுகுறியீட்டை உள்ளிட வேண்டும்
  7. seterusnya என்ற வார்த்தையை அழுத்த வேண்டும்
  8. தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும்

மாநிலத்தில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக சிலாங்கூர் அரசு செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.