கோல சிலாங்கூர், ஆக 4- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் ஜெரம் தொகுதியை சேர்ந்த சுமார் 600 பேர் தடுப்பூசி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்தோர் மற்றும் பண்டார் பாரு கோல சிலாங்கூர், எம்.டி.கே.எஸ். மண்டபத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி பெற நேரில் வந்தவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வாறு மதிப்பிடப்படுவதாக தடுப்பூசி திட்ட இயக்குனர் நாயிம் முகமது ரானி கூறினார்.
நேற்று மாலை 3.00 மணி வரை உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 300 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதாக அவர் சொன்னார்.
இதனிடையே, உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்று மீதான அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருவதாக ஜெரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் நக்முடின் ஹூசேன் கூறினார்.
தடுப்பூசி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தாங்கள் வீடு வீடாக பயணம் மேற்கொண்ட போது பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
ECONOMY
செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் ஜெரம் தொகுதியில் 600 பேருக்கு தடுப்பூசி
4 ஆகஸ்ட் 2021, 7:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

national
அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS); 7 முக்கிய அம்சங்களுடன் ஏற்பாடு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



