ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக சளைக்காது போராடும் பாதுகாப்பு படையினர்- மந்திரி புசார்  புகழாரம்

31 ஜூலை 2021, 2:09 PM
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக சளைக்காது போராடும் பாதுகாப்பு படையினர்- மந்திரி புசார்  புகழாரம்

ஷா ஆலம், ஜூலை 31- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சளைக்காது முன்நிற்கும் பாதுகாப்பு படையினருக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்து வருவதாக அவர் சொன்னார்.

வீரர்கள் தினத்தையொட்டி நாட்டிலுள்ள அனைத்து பாதுகாப்பு படையினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் இறையாண்மையைக் காப்பாதற்கு பாதுகாப்பு படையினர் ஆற்றி வரும் சேவைகளும் செய்து வரும் தியாகங்களும் என்றென்றும் போற்றத்தக்கவை என்று இன்று அனுசரிக்கப்படும் வீரர்கள் தினத்தையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் இராணுவத்தினர், போலீசார் உள்பட நாட்டிலுள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் ஓப்ஸ் பெந்தேங், ஓப்ஸ் பெனாவார், ஓப்ஸ் பாத்தோ உள்ளிட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.