ஷா ஆலம், ஜூலை 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 16,117 ஆக இருந்தது. இந்நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகியுள்ளது.சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று 6,616 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 555 அதிகரித்து 7,171ஆக உயர்வு கண்டுள்ளது.
கோலாலம்பூரில் இந்நோய்த் தொற்று எண்ணிக்கை 2,457 இல் இருந்து 2,880 ஆக உயர்வு கொண்டுள்ளதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கெடாவில் 1,112 சம்பவங்களும் ஜோகூரில் 767 சம்பவங்களும் இன்று பதிவானதாக தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
சபா(913), நெகிரி செம்பிலான்(863), மலாக்கா(531), பினாங்கு (760), கிளந்தான்(532), பேராக் (406), சரவா(464), பகாங்(429), திரங்கானு,(490), புத்ரா ஜெயா(68), லபுவான்(16), பெர்லிஸ்(3).
ECONOMY
கோவிட்-19 நோயிக்கு இன்று 143 உயிர்கள் பலியாகி, தொற்று 17,405 ஆக உயர்ந்தது- சிலாங்கூரில் 7,171 ,பேர் பாதிப்பு
28 ஜூலை 2021, 10:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

national
அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS); 7 முக்கிய அம்சங்களுடன் ஏற்பாடு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



