ECONOMY

மதிப்பீட்டு வரியை ஆகஸ்டு 31க்குள் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து

14 ஜூலை 2021, 1:00 PM
மதிப்பீட்டு வரியை ஆகஸ்டு 31க்குள் செலுத்துவீர்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நினைவுறுத்து

ஷா ஆலம், ஜூலை 14- அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க வரும் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்தி விடும்படி சொத்து உரிமையாளர்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 266,111 சொத்து உரிமையாளர்கள் 17 கோடியே 76 லட்சத்து 638 வெள்ளி வரி பாக்கி வைத்துள்ளதாக மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

வாடிக்கையாளர்கள் ecukai@MBPJ  ePay@MBPj எனும் செயலியைப் பயன்படுத்தி https://ecukai.mbpj.gov.my/mbpjesalinanbil  என்ற அகப்பக்கம் வாயிலாக தங்களின் பில் கட்டணத்தை சரிபார்ப்பது மற்றும் கட்டணத்தைச் செலுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

இதுதவிர, ரொக்கம், காசோலை கடன் பற்று அட்டை, மணியாடர் போன்ற வழிகளிலும் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.