ECONOMY

தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த கூடுதல் மருத்துவ அதிகாரிகள் தேவை- சித்தி மரியா கோரிக்கை

9 ஜூலை 2021, 5:54 AM
தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த கூடுதல் மருத்துவ அதிகாரிகள் தேவை- சித்தி மரியா கோரிக்கை

ஷா ஆலம், ஜூலை 9- சிலாங்கூரில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது தடுப்புசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளின் எண்ணிக்கைகேற்ப தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் கூடுதல் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதில்  மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது. எனினும், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறன் பெற்ற மருத்துவர்கள் மற்றும் தாதியரும் தேவைப்படுகின்றன்றனர் என்றார் அவர்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரவிருக்கிறன. கூடுதலாக தடுப்பூசிகள் இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றவாறு மருத்துவ அதிகாரிகளும் இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள மெலாவத்தி அரங்கிலுள்ள  கோவிட்-19 மதிப்பீட்டு மையத்திடம் (சி.ஏ.சி) கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகளை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.