ECONOMY

மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு 300 கிலோ பழங்கள்- விவசாய இலாகா வழங்கியது

16 ஜூன் 2021, 12:36 PM
மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு 300 கிலோ பழங்கள்- விவசாய இலாகா வழங்கியது

ஷா ஆலம், ஜூன 16- மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு 300 கிலோ உள்நாட்டுப் பழங்களை சிலாங்கூர் மாநில விவசாய இலாகா இலவசமாக வழங்கியது.

வாழை மற்றும் தர்பூசணி ஆகிய பழங்களை மாநில விவசாய இலாகாவின் இயக்குநர் அஸஹார் இப்ராஹிம்  மீடியா சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி முகமது ஃபரிட் அசாரியிடம் வழங்கினார். 

பழங்களை வழங்கும் இந்த நிகழ்வு ஷா ஆலமில் உள்ள பேங்க் ராக்யாட் கட்டிடத்தின் 11வது மாடியில் உள்ள மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்திகளை குறிப்பாக கோவிட்-19 பற்றிய தகவல்களை  துல்லியமாகவும் உடனடியாகவும் வழங்கி வரும்  சிலாங்கூர் மீடியாவை சேர்ந்த முன்களப் பணியாளர்களை அங்கீரிக்கும் வகையில் இந்த பழங்கள் வழங்கப்படுவதாக அஸஹார் கூறினார். 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.