ECONOMY

இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறும்- செல்கேர் உறுதி

10 ஜூன் 2021, 2:24 AM
இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறும்- செல்கேர் உறுதி

சபாக் பெர்ணம், ஜூன் 10- இம்மாத மத்தியில் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராகவும் சிறப்பான முறையிலும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என கிளினிக் செல்கேர் அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனை இயக்கம் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய போதுமான பணியாளர்களும் ஆண்டிஜென் (ஆர்.டி.கே.-ஏஜி) விரைவு சோதனைக் கருவிகளும் கைவசம் உள்ளது உறுதி செய்யப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பலமுறை இத்தகைய பரிசோதனை இயக்கங்களை நடத்திய அனுபவத்தை கொண்டிருப்பதால் இம்முறை எந்த பிரச்னையையும் எதிர்நோக்குவதற்கு வாய்ப்பில்லை என்றார் அவர்.

இரண்டாம் கட்ட சோதனையில் இடம் பெறும் இடங்களை அடையாளம் காண்பது தொடர்பில் சிலாங்கூர் மாநில சிறப்பு நடவடிக்கை குழுவுடன் தாங்கள் தற்போது விவாதித்து வருவதாகவும் இறுதி செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் அங்கீகாரத்திற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்ட பரிசோதனை இயக்கத்தின் போது ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அடுத்தக் கட்ட சோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று முகமது நோர்  கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.