ECONOMY

நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிக்கவே பொது முடக்கம் - சித்தி மரியா கூறுகிறார்

7 மே 2021, 3:03 PM
நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிக்கவே பொது முடக்கம் - சித்தி மரியா கூறுகிறார்

ஷா ஆலம், மே 7- கோவிட்-19 நோய்த் தொற்றின் தொடர்பை துண்டிப்பதற்காகவே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அனைவரின் நன்மைக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஆணையை அனைத்து தரப்பினரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது முடக்கம் என்பது பொது மக்களுக்கு மட்டுமின்றி  மாநில அரசு நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தொல்லை தரக்கூடிய ஒரு நடவடிக்கைதான்.  எனினும் மக்களின் உயிர்களைக் காப்பதற்காகவே இந்நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும் என்றார் அவர்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி பெருந்தொற்றை முடிவுக் கொண்டு வரும் நோக்கில் சிறிது காலத்திற்கு பொது முடக்கத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.