ஷா ஆலம், டிச 9- தாமான் டெம்ப்ளர் சட்ட மன்றத் தொகுதியில் உணவு பட்டுவாடா தொழிலில் ஈடுபட்டிருக்கும் 200 பேருக்கு தொகுதி ஏற்பாட்டில் பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.150சி.சி.க்கும் குறைவான சக்தி கொண்ட 200 மோட்டார் சைக்கிள்களுக்கு பற்றுச் சீட்டுகள் வழங்க 1,300 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சா கூறினார்.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஃபூட் பாண்டா, கிராப் ஃபூட் நிறுவனங்களில் உணவு பட்டுவாடா தொழிலை மேற்கொண்டு வருவோரின் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த பெட்ரோல் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்வுக்கு செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீன் மற்றும் சிலாங்கூர் மாநில அமானா கட்சியின் இளைஞர் பிரிவினர் முழு ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
SELANGOR
தாமான் டெம்ப்ளர் தொகுதி ஏற்பாட்டில் 200 பேருக்கு பெட்ரோல் பற்றுச் சீட்டுகள்
9 பிப்ரவரி 2021, 7:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
புகைமூட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 4 பாரா சுக்மா போட்டிகள் கடும் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கின
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

selangor
RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

உங்கள் கருத்து என்ன?



