ஷா ஆலம், பிப் 9- கோவிட்-19 பெருந் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் ஏழை மக்கள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில அரசாங்க ஆதரவு கிளப் தலைவர் எலிசபெத் வோங் கூறினார்.
சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அவர்களுடன் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் பணியை எளிதாக்குவதற்கும் கோவிட்-19 பரிசோதனையின் ஆக்கத்தன்மையை அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக அந்நோய்த் தொற்று தொடர்பான தரவுகளை மத்திய அரசு மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறைந்த பட்சம் 50 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டத்தை எலிசபெத் வோங், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று தொடக்கினர்.
SELANGOR
சிலாங்கூரின் அனைத்து தொகுதிகளிலும் கோவிட்-19 பரிசோதனை இயக்கம்- அரசாங்க ஆதரவு கிளப் பரிந்துரை
9 பிப்ரவரி 2021, 4:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
புகைமூட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 4 பாரா சுக்மா போட்டிகள் கடும் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கின
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

selangor
RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

உங்கள் கருத்து என்ன?



