ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

14 ஜனவரி 2021, 8:14 AM
சிலாங்கூர் மந்திரி புசாரின் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

ஷா ஆலம், ஜன 14- இன்று தைப்பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அறுவடைத் திருநாளான இந்த பொங்கல் திருநாள் வெற்றியும் வளப்பமும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

மலேசியாவில் பல்லின, சமய, கலாசாரங்களைக் கொண்ட சமுதாயத்தின் அடையாளமாகவும் இந்த விழா திகழ்கிறது என்றார் அவர்.

வளப்பமும் வெற்றியும் நிறைந்த, மக்கள் சுபிட்சத்தை அனுபவிக்க கூடிய ஆண்டாக இந்த ஆண்டு திகழும் என்று நாம் நம்பிக்கைக் கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பொங்கல் திருநாள் தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறுவடை காலத்தின் போது தமிழ் நாட்டில் இந்த விழா கொண்டாடப்படும். மலேசியாவைப் பொறுத்த வரை இந்த விழா பல்லின மக்கள் பங்கேற்கும் விழாவாக திகழ்கிறது என்றார் அவர்.

வகைtourism

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.